வீட்டுவாசலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீவைப்பு.

by Editor / 30-12-2022 09:45:43am
வீட்டுவாசலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீவைப்பு.

தூத்துக்குடி டூவிபுரத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான டாட்டா சுமோ கார் அவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த காரை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். கார் முழுமையாக எரிந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தசம்பவம் அந்தப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories