தேனி மாவட்டத்தில்  அளவுக்கு அதிகமான கனிம வளங்களை வெட்டி எடுத்த 39  குவாரிகளுக்கு 138 கோடி ரூபாய் அபாரதம் 

by Editor / 20-11-2024 07:03:33pm
தேனி மாவட்டத்தில்  அளவுக்கு அதிகமான கனிம வளங்களை வெட்டி எடுத்த 39  குவாரிகளுக்கு 138 கோடி ரூபாய் அபாரதம் 

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி,தேனி ஆகிய தாலுகாக் களில் அளவுக்கு அதிகமான முறையில்  கணிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக  தேனியை சேர்ந்த பெத்துரான் என்பவர்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து  இருந்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கனிம வளத்துறையினருக்கு நீதிமன்றம் உத்திரவிட்டது.

இதையடுத்து  ட்ரோன்கள் மூலமாக சம்மந்தபட்ட குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில், அரசு நிலத்தில் செயல்பட்ட 17 குவாரிகளில் மற்றும் தனியார் நிலத்தில் செயல்பட்ட 22 குவாரிகளில் அனுமதிக்கபட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் அள்ளப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து 58 குவாரி உரிமையாளர்களிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய் துறையினர் விசாரனை மேற்கொண்டு இருந்தனர். ஆனால் விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. 

இந்த நிலையில் தற்போதைய சப் கலெக்டர் ரஜத் பீடன். இந்த விசாரனையின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவும், கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரி உரிமையாளர்களுக்கு 138 கோடி ரூபாய் அபாரதம் செலுத்தவும் உத்திரவிட்டுள்ளார்

 

Tags : தேனி மாவட்டத்தில்  அளவுக்கு அதிகமான கனிம வளங்களை வெட்டி எடுத்த 39  குவாரிகளுக்கு 138 கோடி ரூபாய் அபாரதம் 

Share via

More stories