எனக்கு கொடுத்த அரசு வேலையில் திருப்தி இல்லை: அஜித் சகோதரர்

அரசு எனக்கு கொடுத்த வேலை மற்றும் வீட்டு மனை பட்டாவில் திருப்தி இல்லை என போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் அதிருப்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீன், "நான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ. தூரத்துக்கு அப்பால் எனக்கு அரசுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Tags :