ஆன்லைன் ரம்மி: வாலிபர் தற்கொலை

நெல்லை மாவட்டம் பணகுடி, ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் சில நாட்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தந்தையிடம் பணம் வாங்கியும், கடன் வாங்கியும் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் இதுவரை 6 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் விஷமருந்தி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :