குடிக்க தண்ணீர் தராததால் நின்று போன திருமணம்

by Editor / 17-03-2025 03:29:58pm
குடிக்க தண்ணீர் தராததால் நின்று போன திருமணம்


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (27) மற்றும் அனிதா (22) ஆகிய இருவருக்கும் நேற்று முன்தினம் (மார்ச் 15) இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது கேட்டரிங் ஊழியர்கள், உறவினர்களுக்கு குடிநீர் கொடுக்காததால் சலசலப்பானது. இறுதியில் மணமகன், மணமகள் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று (மார்ச் 16) காலை 10:30 மணிக்கு முகூர்த்தம் இருந்த நிலையில், மணமகள் திடீரென இந்த திருமணமே வேண்டாம் என கூறினார். மணமகனும் திருமணம் வேண்டாம் என கூறியதால், கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது.

 

Tags :

Share via