முதலமைச்சர் மு. .க ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் 542.02 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமான என் எம் பி மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் 1,980 கோடி ரூபாய் முதலீட்டில், 1,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏக்வஸ் (Aequs) குழுமம் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது
.தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ,வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 53 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 6 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்பு கிடங்குகள், 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கு, 2 ஒருங்கிணைந்த விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை வளாகங்கள், தோட்டக்கலைப் பட்டயப்படிப்பு மாணவர் விடுதி, வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம் ஆகியவற்றையும்வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 100 மதி ப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 54 தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்
உயர்கல்வித் துறை சார்பில், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் 542.02 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனை கட்டடங்கள், மகளிர் விடுதிக் கட்டடம், திறன்மிகு மையங்கள் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
Tags :



















