திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

by Staff / 09-02-2024 01:25:12pm
திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படாத நிலையில், இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். பேச்சு வார்த்தை குழு உறுப்பினர்கள் சிலர் எம்.பியாக உள்ளதால் இந்த திடீர் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வரும் 12ஆம் தேதி விசிக, ஐயூஎம்எல், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

 

Tags :

Share via