‘தி கேரளா ஸ்டோரி’ விவகாரம்:இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

by Editor / 16-05-2023 09:05:53am
 ‘தி கேரளா ஸ்டோரி’ விவகாரம்:இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்ப்டுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தைத்தொடர்ந்து அதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்நிலையில், இந்த படம் கடந்த 5ஆம் தேதி நாடு முழுவதும் வெளியானது. ஆனால், மூன்றாம் தேதி, பட வெளியீட்டை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த 32,000 இளம்பெண்களை அவர்களது இஸ்லாமிய நண்பர்கள் ISIS-ல் இணைவதாகக் காட்டி வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாக மனுதாரர்கள் எதிர்த்தனர்.தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அந்தப்படத்தில் நடித்த நடிகையின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories