அயோத்தியில் 7 நட்சத்திர சைவ உணவகம் - முதல்வர் தகவல்

by Staff / 10-01-2024 02:11:20pm
அயோத்தியில் 7 நட்சத்திர சைவ உணவகம் - முதல்வர் தகவல்

அயோத்தியில் 7 நட்சத்திர உணவகம் கட்டப்படும் என்றும், அதில் சைவ உணவு வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அயோத்தியில் பிராண பிரதிஷ்டா உற்சவ் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். அயோத்தியில் விடுதிகள் அமைப்பது தொடர்பாக 25-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன என்றார். அயோத்திக்கு நாடு முழுவதிலும் இருந்து சாலை, விமானம் மற்றும் ரயில் இணைப்புகள் உள்ளன. தெருவோர வியாபாரிகளின் வணிக மேலாண்மைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

 

Tags :

Share via