மலைவாழ் மக்கள் 15 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக டெபாசிட் தொகையை கட்டிய தமிழக வெற்றிக்கழகத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ள நிலையில் போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ளது.
மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கானலை கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசினால் 35 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது
வீடுகள் கட்டிக் கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆன போதிலும் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை .
மின் இணைப்பு வசதி கேட்டு இந்தப் பகுதி மக்கள் பல வருடங்களாக மாவட்ட நிர்வாகத்திடமும் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தனர்.இருந்த போதிலும் இவர்களுக்கு உரிய பதில் வழங்காமல் இருந்த நிலையில் இதுகுறித்து தகவல் இருந்த தேனி மாவட்ட தமிழக வெற்றி கழக்கத்தினர் மலைவாழ் மக்களுக்கு உதவ முன் வந்தனர்.
தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் லெப்ட் பாண்டி என்கின்ற -பாண்டி சம்பந்தப்பட்ட கிராம மக்களை சந்தித்து 15 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான டெபாசிட் தொகையான மொத்தம் 81 ஆயிரம் ரூபாயினை மின்சார வாரியத்தில் செலுத்தி 15 குடும்பங்களுக்கு தனித்தனியாக மின் இணைப்பு வழங்குவதற்கான டெபாசிட் தொகையை கட்டினார்.இவ்வாறு கட்டப்பட்ட தொகைக்கான ரசீதை 15 குடும்பங்களை வரவழைத்து அவர்களிடம் நேரடியாக ஒப்படைத்தார்.
இரண்டு ஆண்டுகளாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டி பலமுறை மனு அளித்த நிலையிலும் அது குறித்து அதிகாரி நடவடிக்கை எடுக்காத சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் செயல் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.மின்சார வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வரும் தகவல் கிடைத்ததால் 15 குடும்பங்களுக்கு தேவையான மின்சார வசதிக்கான டெபாசிட் தொகையை கட்சி சார்பாக செலுத்தியதாக தேனி மாவட்ட தலைவர் பாண்டி தெரிவித்தார்.
Tags : மலைவாழ் மக்கள் 15 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக டெபாசிட் தொகையை கட்டிய தமிழக வெற்றிக்கழகத்தினர்.