அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுரூபாய்.3 கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்.

by Editor / 19-01-2023 09:08:59pm
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுரூபாய்.3 கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்.

தென்காசி மாவட்டம் கீழபாறையடி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. திருமணமான இவர் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட "நியூ ரைஸ் ஆலயம்" என்ற தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குனராக வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி மக்களிடம் பணத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் ஒரு வருட காலமாக பணத்தை திரும்ப தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளதாக தகவல் கிடைக்கவே ஏராளமான மக்கள் அந்தப்பகுதிக்கு சென்று பார்த்து திரும்பிய நிலையில் இன்று ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அவரது வீட்டை பூட்டி வீட்டின் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டமுதலீட்டாளர்கள் கூறும்போது, அதிக வட்டிக்கு பணம் தருவதாக நம்பி, தங்கள் பகுதியில் உள்ள மக்கள் 80க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை அடகு வைத்தும், குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த பணங்கள் என அனைத்தையும் செலுத்தி உள்ளோம். தங்கள் பகுதியில் மட்டும் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் வட்டியும் தரவி்ல்லை, அசலும் திரும்பத் தரவில்லை. இது தொடர்பாக ஆறுமுகசாமியிடம் கேட்கும் போது உரிய பதிலும் அளிப்பதாக தெரியவில்லை. வேறு வழியின்றி  அவரது வீடை பூட்டி முற்றுகையிட்டுள்ளோம். தங்களுடைய பணம் கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த நிறுவனம் மீது வடமாவட்டத்தில் மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.தென்காசி மாவட்டத்தில் இந்த நிறுவனம் மீதோ இயக்குனர் மீதோ இன்னும் வழக்கு பதிவு செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமுதசுரபியெனும் நிறுவனம் ஏராளமானவர்களிடம் முதலீடுகளை பெற்று இரவோடு இரவாக கடந்தாண்டு தலைமறைவாகிய நிலையில் தற்போது இந்த நிறுவனமும் மக்களை ஏமாற்றியுள்ளதால் மக்கள் கண்ணீரில் உள்ளனர்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுரூபாய்.3 கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்.
 

Tags :

Share via