திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா

by Staff / 01-05-2023 02:31:56pm
திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா


12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், '12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பிறகும் அவதூறு பரப்புகின்றனர். திமுக அரசு கொண்டு வந்த மசோதாவாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமே அதை எதிர்த்ததை பாராட்டுகிறேன்' என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo