நெல்லை டவுண் பகுதிகளில் சாலைகளை காணவில்லை வாகன ஓட்டிகள் சிரமம்

by Editor / 14-04-2022 08:58:10am
நெல்லை டவுண்  பகுதிகளில் சாலைகளை காணவில்லை வாகன ஓட்டிகள் சிரமம்

நெல்லை டவுண் நயினார்குளம் சாலையில் உள்ள வத்தல் மார்க்கெட் பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது என்றும் ஒவ்வொரு கடைக்கும் மாதம் மாதம் ரூபாய் 250 சங்கம் நிதியாக வசூலிக்கிறார்கள் என்றும்,மேலும் ஒரு லாரி உள்ளே வருவதற்கு 20 என்றும் ஆட்டோவிற்கு 10 ரூபாய் என்றும் லாரி நிறுத்தம் நீண்ட நேரம் என்றால் ரூபாய் 100 வசூலிக்கிறார்கள்,ஒரு நாளைக்கு இப்பகுதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்துசெல்வது குறிப்பிடதக்கது.

சங்கத்தில் இருந்து மாதம் மாதம் ரூபாய் மட்டும் வாங்குகிறார்களே தவிர முறையான சாலை வசதி எதுவும் ஏற்படுத்தி தரவில்லை இதனால் மழை நேரங்களில் குண்டும் குழியுமாகவும்,சேறும் சகதியுமாகவும்,காற்று அடிக்கும் காலங்களில் அதிக தூசி கடைகளில் படர்ந்து காட்சி அளிக்கிறது என்றும் இதனால் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்றும் கூறினார்,மேலும் இப்பகுதியில் கடைகள் மூன்று தெருவாக உள்ளது என்றும் மூன்று தெருவிலும் சாலைகள் இல்லாமல் மண் மற்றும் காணப்படுகிறது,சங்கம் சில நேரம் மட்டும் சாலை அமைக்கிறோம் என்று மணல் கொண்டு மட்டும் தான் குண்டும் குழியுமானவைகளை சரிசெய்கிறார்கள் தார் சாலை அமைக்கப்படவில்லை என்றும் இப்பகுதியில் தார் சாலைகள் 10 ஆண்டுக்கும் மேல் அமைக்கப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் கழிப்பறை ஒன்று உள்ளது அதுவும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது என்றும் கடைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவே மாதம் மாதம் ரூபாய் வசூலிக்கிறார்கள் ஆனால் எதுவும் செய்யாமல் உள்ளனர்,சங்கத்தினர் விரைந்து இப்பகுதியில் தார் சாலைகள் அமைத்து வாகனங்கள் சிரமம்மின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார்.

 

Tags :

Share via