காதலியை சுட்டுக் கொன்ற காதலன்

by Staff / 24-06-2024 02:48:51pm
காதலியை சுட்டுக் கொன்ற காதலன்

உத்திரப்பிரதேச த்தில் திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் காதலி காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாதியா மாவட்டம் சோனகிரி பகுதியைச் சேர்ந்த காஜல் (22) என்பவருக்கும் ஜான்சியைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முன், மணப்பெண் அருகில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காஜலின் முன்னாள் காதலர் தனிராம் அவரை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். காஜல் வர மறுத்ததால் கோபமடைந்த தனிராம், துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றார். இதையடுத்து, போலீசார் தப்பிய ஓடிய தனிராமை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via