கடையநல்லூர் காட்டுப்பகுதியில் எரிந்தநிலையில் ஆண் சடலம்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் இலங்கைத்தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது.இதன் அருகில் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக புதன்கிழமை இரவு 7மணியளவில் கடையநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்துவந்து பார்வையிட்டநிலையில் தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார்.மேலும் அந்தஉடலைகைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.ஏற்கனவே 11ஆம் தேதி செவ்வாய்கிழமை காலையில் இலத்தூர் மதுநாதபேரி குளத்துப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டுபிடிக்கப் பட்டது இந்நிலையில் இன்று கடையநல்லூர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆன்,மற்றும் பெண் சடலங்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : கடையநல்லூர் காட்டுப்பகுதியில் எரிந்தநிலையில் ஆண் சடலம்.