பட்டா இடத்தில் நட்ட பா.ஜ,க கொடியை அகற்றிய காவல்துறை- 31பேர் கைது.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இரண்டு இடங்களில் கொடியேற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகரத் தலைவர் அருணாசலம் தலைமையில் இந்த விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கொடிகளை நட்ட போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கொடியை நட்டக்கூடாது அதனை உடனடியாக அகற்ற வேண்டும் யாருக்கும் தெரியாத இடத்தில் வேண்டுமானால் கொடியை நட்டு கொள்ளுங்கள் என கூறவே பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா மற்றும் காவல் துறையினர் வாக்குவாதம் ஏற்பட்டது. பாட்டா இடத்தில் பாஜகவினுடைய கொடியை நடுவதற்கு யார் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் சொந்த இடத்தில் வைப்பதற்கு யாரும் எதிர்க்க முடியாது. பொது இடத்தில் வைப்பதற்கு மட்டுமே அனுமதி வாங்கப்பட வேண்டும். சொந்த நிலத்தில் பாஜக கொடி நடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிகாரிகளிடம் பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் எடுத்து கூறினர்.ஆனால் காவல்துறையினர் பொது இடத்தில் எந்த இடத்திலோ அனுமதி பெறாமல் கட்சி கொடிய வைக்கக்கூடாது என்று கூறி அந்த கொடியை அகற்றியதோடு அங்கு கொடியேற்ற வந்திருந்த பாஜகவினுடைய நகரத் தலைவர் அருணாசலம், மற்றும் பாஜக னுடைய மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உள்ளிட்ட 31 நபர்களை கைது செய்து மண்டபத்தில் கொண்டு அடைத்து வைத்தனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது அதன் பின்பு இரவு ஒன்பது முப்பது மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Tags : பட்டா இடத்தில் நட்ட பாஜக கொடியை அகற்றிய காவல்துறை 32 பேர் கைது.