கோடை மழை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் வெளுத்து வாங்கி வருகிறது.

by Editor / 16-05-2024 11:48:22pm
கோடை மழை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் வெளுத்து வாங்கி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கோடை மழை கனமழையாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மழையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் மிக மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் கலியாவூர் பகுதியில் இருந்து புன்னகாயல் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கோ அல்லது ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல், திருவலுதிநாடார்விலை, தென்திருப்பேரை, குரங்கணி, சேதுக்குவாய்த்தான், சாயர்புரம், பண்டாரவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Tags : ஏரல் பகுதியில் கோடை மழை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் வெளுத்து வாங்கி வருகிறது..!

Share via