முகக் கவசம் கட்டாயம்.. தமிழக மக்களுக்கு அலர்ட்

by Staff / 22-11-2023 11:57:17am
முகக் கவசம் கட்டாயம்.. தமிழக மக்களுக்கு அலர்ட்

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கோவையில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, இருமல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை காய்ச்சி அருந்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 

Tags :

Share via