சத்தான இட்லி செய்முறை

by Admin / 07-07-2021 04:44:35pm
சத்தான இட்லி செய்முறை

தேவை:

      புழுங்கல் அரிசி – 300 மி.லி

      உளுந்தம் பருப்பு – 75 மி.லி.

செய்முறை

       அரிசி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுந்தம்பருப்பு போட வேண்டும். அரிசியை நன்றாகத் தண்ணீர் விட்டு நனைய வைத்து உரலில் இட்டு நன்றாக ஆட்டவும். உளுந்தபருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் உரலில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும். இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைத்து, இட்லி தட்டிலிட்டு வேக வைக்கவும். இட்லி மாவையே தோசைக்கும் உபயோகப்படுத்தலாம். தோசைக்கு அரிசியின் அளவில் மூன்றில் ஒரு பாகம் உளுந்தம் பருப்பு போட்டால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். இட்லிக்கு உளுந்தம் பருப்பு புதிய பருப்பு என்றால் சற்று குறைத்துப் போட்டால் நல்லது.

 

Tags :

Share via