தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு24 சதவீத நிலத்தை மட்டுமே மாநில அரசு இதுவரை கையக ப்படுத்தி வழங்கி உள்ளது.

by Admin / 10-02-2026 01:28:55am
தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு24 சதவீத நிலத்தை மட்டுமே மாநில அரசு இதுவரை கையக ப்படுத்தி வழங்கி உள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் நடைபெறும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். அதற்கு அளிக்கும் விதமாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில்,

தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 4326 நிலத்தில் வெறும் 24 சதவீத நிலத்தை மட்டுமே மாநில அரசு இதுவரை கையக ப்படுத்தி வழங்கி உள்ளதாகவும் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு ஏற்கனவே ரூபாய் 1465 கோடியை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளதாகவும் 2026 27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 7611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது 2014 வருடங்களுக்கு முந்தைய ஒதுக்கீட்டை விட 8.5 மடங்கு அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நிலம் கிடைக்காததால் பின்வரும் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர் மதுரை தூத்துக்குடி 91 சதவீத நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என்றும் திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை எம்பத்தி ஆறு சதவீத நிலம் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்திற்கு இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணியே தொடங்கவில்லை என்றும் மத்திய அரசின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 19 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் 94 சதவீதம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு நிதி ஒதுக்காததை திட்ட தாமதத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories