அடுத்த 2 நாட்களில்   தமிழகத்தின் பல இடங்களில்  மழை 

by Editor / 01-07-2021 06:36:37pm
அடுத்த 2 நாட்களில்   தமிழகத்தின் பல இடங்களில்  மழை 

அடுத்த 2 நாட்களில்  தமிழகத்தின் பல இடங்களில்  மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருபத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிஙல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 
 தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

Tags :

Share via

More stories

Logo