காங்கிரஸ் எம்பி சவுத்ரி சந்தோக் சிங். இன்று,சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது, பஞ்சாப் மாநிலம் பில்லூரில் காங்கிரஸ் எம்பி சவுத்ரி சந்தோக் சிங். இன்று,சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.வயது 76.இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவர், நடைபயணத்தின் போது சரிந்து விழுந்து ஆம்புலன்சில் பக்வாராவில் உள்ள விர்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.நடைபயணம் நிறுத்தப்பட்டு, ராகுல் காந்தி மருத்துவமனைக்குச் சென்றார். சிங் முன்னாள் பஞ்சாப் அமைச்சராகவும், ஜலந்தர் தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்தார். எம்பி சவுத்ரி சந்தோக் சிங்கின் உடல் தகனம் நாளை காலை 10.30 மணிக்கு ஜலந்தரில் உள்ள அவரது சொந்த ஊரான கக்லன் தலிவால் கிராமத்தில் நடைபெறுகிறது.

Tags :