கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்  எந்திரத் துப்பாக்கியுடன்  சினிமா பிரமுகர்

by Editor / 07-08-2021 04:08:55pm
 கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்  எந்திரத் துப்பாக்கியுடன்  சினிமா பிரமுகர்


 சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எந்திர துப்பாக்கியுடன் நின்றிருந்த சினிமா பிரமுகரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


. சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலைய போலீசார் அதிகாலையில் அங்குள்ள சாப் கேம்ஸ் வில்லேஜ் அருகில் 100 அடி சாலையில் சிறப்பு எஸ்ஐ பழனி, தலைமைக்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 


அப்போது அந்த வழியாக வந்த ஹோண்டா ஆக்டிவா வண்டியில் வந்தவரை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த அட்டைப் பெட்டியின் உள்ளே ஒரு பெரிய டிராவல் பேக்கில் 2 எந்திரத் துப்பாக்கிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பெயர் விக்டர் (வயது 27) என்றும் பெரம்பூர், கஸ்தூரி பாய் காலனியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த துப்பாக்கிகள் டம்மி என்பதும் தெரியவந்தது. விக்டர் பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

தற்போது காரைக்குடியில் பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்திற்காக இந்த 2 டம்மி துப்பாக்கிகளையும் காரைக்குடிக்கு அனுப்பி வைக்க கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories