தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.488 குறைந்தது

by Editor / 07-08-2021 04:04:48pm
தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.488 குறைந்தது

 

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து ரூ. 35,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது. அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் செய்வதால், தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.தன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து , சவரன் ரூ.35,520-க்கும், கிராமுக்கு ரூ.61 குறைந்து, ரூ.4,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.  வெள்ளியின் விலை கிராம் ரூ.72 என விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்து ரூ.70 க்கு விற்பனையாகிறது. அதன்படி, வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.70,000 க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo