ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
பிரபலமான அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, அவர் கூறியிருப்பதாவது:-
ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படும். எனவே, தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
Tags :