தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 657 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 12 பேர் உயிரிழந்தனர்

by Editor / 14-12-2021 09:25:05pm
 தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 657 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டது. 12 பேர் உயிரிழந்தனர்

 தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 657 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் நேற்று 674 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,00,085 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,624-ஆக அதிகரித்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 657 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டது. 12 பேர் உயிரிழந்தனர்
 
Tags :

Share via