கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து

by Editor / 29-04-2025 02:32:50pm
கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் ஆர். ஆர். நகரில் உள்ள தனியார் ஆலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு லாரி ஒன்று சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. லாரியை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த விவின் என்பவர் ஓட்டிச் சென்றார். லாரி கோவில்பட்டி இனாம் மணியாச்சி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை மையத்தில் உள்ள இரும்பு தடுப்பு வேலியில் மோதி, சுமார் 200 மீட்டர் தூரம் வரை தடுப்புகளை உடைத்துக் கொண்டு நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via