சென்னை ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார்கள் காரணமாக சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அதே போல், கந்தன்சாவடி, தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :