தங்க நகை தொழில் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.

by Editor / 05-12-2024 09:30:48pm
தங்க நகை தொழில் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.

கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ₹126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவானத் திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம். கடந்த நவம்பர் மாதம் கோவைக்குச் சென்றிருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிவித்திருந்தார்.குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 3.41 ஏக்கரில் தங்க நகை தொழில் பூங்கா அமைய உள்ளது.

 

Tags : தங்க நகை தொழில் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

Share via

More stories