டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்  -  முதலமைச்சர் சந்திப்பு

by Admin / 29-05-2023 09:37:03am
டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்  -  முதலமைச்சர் சந்திப்பு

 இந்த மாதம் 25ஆம் தேதி அரசு முறை  பயணமாக ஜப்பான் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உடைய வர்த்தகத்  தலைவர்களையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து  தமிழகத்திற்கான வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளும்  பொருட்டு 9 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்த முதலமைச்சர் இன்று ஜப்பான் டோக்கியோவில் ஜப்பான்வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்   இஷிகுரோ நோரிஹி கோவையும்,  அதன்செயல் துணைத் தலைவர் . கசுயா நகஜோவையும்  சந்தித்து வர்த்தகம் குறித்த உடன்பாட்டு முயற்சியை மேற்கொண்டார்..

 நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்திலும் ஜப்பானில் குடியேறியுள்ள தமிழர்களுடைய கலை நிகழ்ச்சிகளிலும் ஜப்பானிய தமிழக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக முதலமைச்சர்உரை நிகழ்த்தியதோடு அதிவிரைவு ரயிலிலும் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags :

Share via

More stories