பிரதமர் நரேந்திர மோடி கங்கா அதிவிரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினார்.

by Admin / 30-04-2026 12:33:10am
பிரதமர் நரேந்திர மோடி கங்கா அதிவிரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி உத்திரப்பிரதேசத்தில் கங்கா அதிவிரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினார் .இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு புதிய உயிர்நாடி என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தச் சாலை 594 கிலோ மீட்டர் நீளமுள்ளது.  மீரட் மற்றும் பிரயாக்ராஜை இணைக்கிற இந்த சாலை உத்திரப்பிரதேசத்தின் மிக நீளமான அதி விரைவு சாலையாகும். இந்தச் சாலையின் மூலம் மீரட் முதல் பிரய்யாக் ராஜ் இடையிலான பயண நேரம் 12 மணி நேரத்தில் இருந்து சுமார் 6 மணி நேரமாக குறையும் சுமார் 36. 230 கோடி மதிப்பீட்டில் இந்த அதிவிரைவுச் சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது உத்திரபிரதேசத்தின் 12 மாவட்டங்கள் வழியாக செல்கிறது ..இதன் மூலம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் விரைவாக இணைக்கப்படுவதுடன் தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்பாடு அடையும். அத்துடன் அவசரகால விமானங்கள் தரையிறங்குவதற்கான ஓடு தளம், நவீன சுங்கச்சாவடிகள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

 

Tags :

Share via
Logo