காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் தென்கலை- வடகலை பிரச்சனை

by Admin / 30-04-2026 01:08:18am
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் தென்கலை- வடகலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருஅவதார உற்சவத்தை முன்னிட்டு வடகலை மற்றும் தென்கலை பிரிவினிடையே மீண்டும் மோதல் உருவானது. கோவிலின் கருவறை மண்டபத்தில் பாடல் பாடுவதில் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் சண்டையாக வெடித்தது. தாத்தாச்சார்ய பிரிவினர் பாடல் பாடுவதற்கு தென்கலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து  காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதப்படுத்தினர் .பாதுகாப்பு கருதி கோவில் வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிலில் திவ்ய பிரபந்தம் மற்றும் தோத்திரப் பாடல்களை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பான உரிமைப் போராட்டம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது தற்போது நிலுவையில் உள்ள இந்த வழக்கை சுமூகமாக முடிக்க நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமித்தது. இதற்கு முன்பு வடகலை தென்கலை பிரிவினையே வைகாசி பிரம்மோற்சவம் மற்றும் பல்வேறு உற்சவங்களின் போதும் இந்த பிரச்சனை வடித்தது. உற்சவங்களின் போது சுவாமி புறப்பாட்டின் முன்னும் பின்னும் 4000 திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திரங்கள் பாடுவதில் யார் முதலிடம் பெறுவது என்பதில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவானது. மே 2025-ல் நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் விழாவில் கங்கைகொண்டான் மண்டபத்தில் மந்திர புஷ்பம் பாடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இந்த மோதலால் சுவாமி வீதியுலா நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. வடகலை பிரிவினர் தென்கலை பிரிவினர் வீடியோ எடுப்பதை தடுத்து செல்போன்களை பறித்து எரிந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன 2025 டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்ற முழங்கிய தீர்ப்பில் கோவிலில் பிரபந்த பாட தென்கலை பிரிவினருக்கே பிரத்தியோக உரிமை உண்டு என 1915 மற்றும் 1963 ஆம் ஆண்டின் முந்தைய தீர்ப்புக்களை சுட்டிக்காட்டி உத்தரவிட்டது. இருப்பினும் தங்களுக்கு பாரம்பரிய உரிமை இருப்பதாக வடகலை தரப்பினர் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo