கணவர் மரணம்.. பிணத்துடன் குடும்பம் நடத்திய மனைவி

கோயம்புத்தூர்: கோட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (48). இவருடைய மனைவி சமீம் நிஷா (45). இவர்களுக்கு ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று, வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக ஷாருக்கானுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தந்தை இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. தாயார் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கணவர் இறந்ததுகூட தெரியாமல் 5 நாட்கள் பிணத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
Tags :