நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து வெந்தயம்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வெந்தயம் சிறந்த மருந்தாகும். வெந்தயத்தில் வைட்டமின் ஏ, சி, கே, கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கெட்ட கொலாஸ்ட்ராலை குறைக்க உதவும். இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் இதில் இருப்பதால் வெந்தயம் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது. நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
Tags :