இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் செர்பியாவில் கண்டெடுப்பு

by Editor / 20-08-2022 01:50:05pm
இரண்டாம் உலகப்போரில் மூழ்கிய ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் செர்பியாவில் கண்டெடுப்பு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் கடும் வரட்சி காரணமாக ஆற்றின் நீர்மட்டம் குறைந்ததால் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் வெளியே தெரிகின்றன. 1944ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாசி படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதலை கைவிட்டு பின்வாங்கியது. செர்பியாவின் பகுதி அருகே ஆற்றில் இந்த போர் கப்பல் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆறுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via