கோயில் திருவிழா மிதிபணத்தை எண்ணிய நிர்வாகியிடம் ₹56,950 ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே செவ்வூர் கிராமத்தில் டீக்கடையில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ராமன் (62) என்பவரிடம் ₹56,950 ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்.கீரணிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா முடிந்து வரவு செலவு கணக்குகளை டீக்கடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் மக்களிடம் பணம் வசூல் செய்த நோட்டு ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.எனினும், வாக்காளர்களுக்கு கொடுக்க அவர் பணம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags : கோயில் திருவிழா மிதிபணத்தை எண்ணிய நிர்வாகியிடம் ₹56,950 ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்.



















