உத்தமபாளையத்தில் சாதி சான்றிதழ் கேட்டு ஆர்ப்பாட்டம் 

by Editor / 06-08-2021 04:12:05pm
உத்தமபாளையத்தில் சாதி சான்றிதழ் கேட்டு ஆர்ப்பாட்டம் 

 


தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சார்பில் தமிழக அரசை கண்டித்தும்,DNT மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிடு அல்லது உயிருடன் இருக்கும் DNT மக்களுக்கு இறப்புச் சான்று வழங்கிடு போன்ற கோஷங்களை எழுப்பி நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டமானது கம்பம் ஒன்றிய பொது செயலாளர் கே.மகேஷ்வரன் தலைமையில் கட்சி நிர் வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.


இதில் முக்கிய கோரிக்கைகளான 10.5% இட ஒதுக்கீட்டை நிரந்தரமாக தடைசெய் வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுத்து எண்ணிக்கையின் அடிப்படையில் சலுகைகளை வழங்கிட வேண்டும், DNT ஒற்றை சான்றிதழ் வழங்கிட வேண்டும்,68 சமுதாய மக்ககளை மட்டும் தமிழக அரசு வஞ்சிக்க கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.இதுகுறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில் குறுகிய காலத்திற்குள் டி.என்.டி.ஒற்றை சான்றிதல் வழங்கவில்லை எனில் தமிழக அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விட்டு அண்டை மாநிலத்திற்கு அகதிகளாக குடிபெயறப்போவதாகவும்  தெரிவித்தனர். 
இதனையடுத்து கோரிக்கைகளை மனுவாக எழுதி உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ச்சுனன் அவர்களிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மேல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்த பிறகு ஆர்ப்பாட்டத்த்தை கைவிட்டனர்.

 

Tags :

Share via