30 முறை கத்தியால் குத்திக் கொலை -
பீகார் மாநிலம் நவாடாவில் சமீபத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராகுல் என்ற இளைஞர் பட்டப்பகலில் நடைபாதையில் கொலை செய்யப்பட்டார். 30 முறைக்கு மேல் கத்தியால் குத்தியதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையில் சென்றவர்கள் யாரும் இந்த கொடூரத்தை தடுக்கவில்லை. பலியானவர் ஒரு பெண் கான்ஸ்டபிளின் மகன் என்பது தெரியவந்துள்ளது. பதறவைக்கும் இந்த கொலையின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
Tags :



















