நகைக்கடன் தள்ளுபடி எப்போது ? அமைச்சர் ஐ பெரியசாமி விளக்கம் 

by Editor / 09-06-2021 04:06:48pm
 நகைக்கடன் தள்ளுபடி எப்போது ? அமைச்சர் ஐ பெரியசாமி விளக்கம் 



 திமுக தனது தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
இது குறித்து அமைச்சர் பெரியசாமி பேட்டியளித்த போது கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்  அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்த போது நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யப்படும். 5 சவரனுக்கு மிகாமல் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருக்கிறோம். அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo