நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்.
நாளை பாராளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கினார். தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்.வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும். இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம். தமிழர் உரிமைக்கான போராட்டம்! எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம். நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும். இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று எக்ஸ் தளபதிவு.
முன்தாக வீடியோ வழியாகவும் தம் கருத்தை இவ்வாறுபதிவுசெய்திருந்தாா்.
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Tags :



















