ரவுடி வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

by Staff / 31-01-2023 03:38:12pm
ரவுடி வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ், டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி)ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். போலீசாரின் திடீர் சோதனையால் அந்த பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

 

Tags :

Share via

More stories