3 குழந்தைகளை தவிக்க விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூமாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பூமா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :