ரூ.200-க்கு கீழ் இவ்வளவு திட்டம் இருக்கா?- சிறந்த ரீசார்ஜ் திட்டம் இதோ.

by Editor / 13-01-2022 11:13:15am
ரூ.200-க்கு கீழ் இவ்வளவு திட்டம் இருக்கா?- சிறந்த ரீசார்ஜ் திட்டம் இதோ.

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ-ன் பெரும்பாலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200 என்ற விலைப் பிரிவின் கீழ் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் தினசரி 1 ஜிபி முதல் 2 ஜிபி வரை டேட்டா வரம்புகளுடன் கிடைக்கின்றன. ஜியோ மற்றும் விஐ சந்தாதாரர்கள் தேர்வு செய்ய ஐந்து பேக்குகள் வரை கிடைக்கின்றன. ஏர்டெல் இரண்டு மட்டுமே வழங்குகிறது.

அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் தங்களது திட்டங்களின் விலை உயர்த்தி அறிவித்தன. இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் விஐ பல்வேறு விலைப் பிரிவுகளில் திட்டங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் ரூ.200 என்ற விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.200 விலைப் பிரிவின் கீழ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில் இதன் முதல் ரீசார்ஜ் திட்டம் ரூ.119 ஆக இருக்கிறது. இது மிகக் குறைவான ரீசார்ஜ் திட்டமாக இருக்கும். ரூ.119 ரீசார்ஜ் திட்டத்தின் சலுகைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் இலவச குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்கி வருகிறது. அதோடு 14 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா தினசரி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் மொத்த டேட்டா வரம்பு 21 ஜிபி ஆகும். இந்த டேட்டா வரம்புக்கு பிறகு இதன் வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். அதோபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோவின் பயன்பாடுகள் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.200 விலை பிரிவில் கிடைக்கும் மற்றொரு சிறந்த திட்டமாகும். 23 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. திட்டத்துக்கான மொத்த டேட்டா வரம் 34.5 ஜிபி ஆகும். ரூ.119 திட்டத்தை போன்றே, தினசரி வரம்பு முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.

ஜியோவின் ரூ.179 மற்றும் ரூ.149-க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், தினசரி 1 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டமானது ரூ.149 விலையில் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.179 விலையில் 24 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் 1 ஜிபி டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு உதவியாக இருக்கும். இது வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ், இலவச ஹலோ ட்யூன்கள், அமேசான் பிரைம் 30 நாட்கள் இலவச சோதனை மற்றும் இலவச விங்க் மியூசிக் ஆகிய சலுகைகளை வழங்குகிறது. இந்த அனைத்து திட்டங்கும் 24 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு திட்டமாகும். ஜியோவின் ரூ.179 திட்டத்தில் போல் இல்லாமல் ஏர்டெல் ரூ.179 திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.155 திட்டத்தை போல் இல்லாமல் இந்த திட்டம் ஹலோ ட்யூன்ஸ், அமேசான் பிரைம் 30 நாட்கள் இலவச சோதனை, இலவச விங்க் மியூசிக் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.99-க்கு கிடைக்கிறது. இது குரல் அழைப்பு சலுகை மற்றும் 200 எம்பி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும் குரல் அழைப்புகளுக்கு வினாடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படுகிறது.

விஐ நிறுவனம் ரூ.200-க்கு கீழ் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. விஐ நிறுவனமும ரூ.179 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் விஐ மூவிஸ் மற்றும் விஐ டிவி-க்கான அணுகலை வழங்குகிறது.

விஐ வழங்கும் மற்றொரு திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது ரூ.199 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 1 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டம் விஐ மூவிஸ் மற்றும் விஐ டிவி-க்கான அணுகலை வழங்குகிறது. அதேபோல் ரூ.129 விலையில் கிடைக்கும் திட்டமானது 18 நாட்கள் செல்லுபடியாகும், இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 200 எம்பி டேட்டாவை வழங்குகிறது. ரூ.149 விலையில் கிடைக்கும் விஐ ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் 21 நாட்கள் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. விஐ நிறுவனம் வழங்கும் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரலழைப்பு உள்ளிட்ட அணுகலை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

 

Tags :

Share via