மனிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

by Admin / 19-08-2025 07:39:04pm
 மனிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில், ராஜஸ்தான் காந்தி நகரைச் சேர்ந்த மனிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதான இவர் பெண் கல்வி நரம்பியல் பன்முகத்தன்மை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தன் கருத்துக்களை வெளிப்படுத்தி மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை கடந்த ஆண்டு 2024 மிஸ் யூனிவர்ஸ் இந்தியா பட்டம்வென்ற மேகா சின்காவிடம் பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து உத்திர பிரதேசத்தைச் சார்ந்த முதல் ரன்னராக தான்யா சர்மா அறிவிக்கப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் பெற்ற மணிகா விஸ்வகர்மா இந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 மனிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

Tags :

Share via