இஸ்லாமிய மற்றும் கிறித்துவ கோவில்களை புணரமைக்க தமிழக முதல்வர் உத்தரவு.அமைச்சர் பொன்முடி. 

by Editor / 17-03-2025 12:09:15am
இஸ்லாமிய மற்றும் கிறித்துவ கோவில்களை புணரமைக்க தமிழக முதல்வர் உத்தரவு.அமைச்சர் பொன்முடி. 

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய யூனியன் லீக் முஸ்லிம் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனம் மற்றும் கதர் கிராம வாரிய தொழில்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசி அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்துமத கோவில்களை புணரமைப்பு செய்வதைப் போலவே இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மத கோவில்களையும் சீரமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தமட்டில் நாம் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒன்றிய அரசு இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மும்மொழிக் கொள்கை என பல்வேறு திட்டங்களை திணித்து வருவதாக குற்றம் சாட்டினார். 
.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடை வழங்கியவர் தமிழக முதலமைச்சர் ஹஜ் பயணத்திற்கு செல்பவர்கள் தங்குவதற்காக சென்னையில் மாளிகை கட்டி தர உள்ளதாக தமிழக முதலமைச்சர் அவர்கள் சொல்லி உள்ளார் இது எல்லாம் அரசியலுக்காக அல்ல வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்களுக்காகவும் நல்லது செய்யக் கூடியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர் பெரியார் அண்ணா கலைஞர் வழியில் வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு மத வெறியை தூண்டுகிறார்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எல்லாம் தீண்டப்படாதவர்கள் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள், இந்துக்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளன ஆனால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவத்தில் ஜாதியை வேறுபாடுகள் கிடையாது, இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிற நாம் சமூக சிந்தனையோடு சமூக சமத்துவத்தோடு சுதந்திர மனப்பான்மையோடு எல்லோரும் வாழ வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் இந்த நோன்பின் நோக்கம் எல்லோரும் சமம் என்பதை உணர்த்துவது தான் இஃக்தார் நோன்பின் நோக்கம் என அமைச்சர் பொன்முடி பேசினார்.

 

Tags : இஸ்லாமிய மற்றும் கிறித்துவ கோவில்களை புணரமைக்க தமிழக முதல்வர் உத்தரவு.அமைச்சர் பொன்முடி. 

Share via