டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை பாஜக நிர்வாகிகள் வீட்டு சிறையில்.

தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து, இன்று (மார்ச் 17) பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திற்காக புறப்பட்ட கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் 11 பேர் வீட்டு காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை பாஜக நிர்வாகிகள் வீட்டு சிறையில்.