நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்..?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணை கூட்டரங்கில்நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,காங்., பா.ஜ.,தே.மு.தி.க., இ.கம்யூ., மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.அரசியல் கட்சிகளின் ஆக்கப்பூர்வமாக கருத்துக்களை கேட்டு, அதை தேர்தலில் செயல்படுத்தவும், மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக மாநகராட்சிகள்,நகராட்சிகளுக்கும்,2ஆம் கட்டமாக பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த ஆணையம் அரசியல் கட்சிகளோடு கலந்தாலோசனை செய்து இன்று தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags : local body elaction