காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த தலிபான்கள்

by Editor / 03-09-2021 12:58:09pm
காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த தலிபான்கள்

தலிபான்கள் ஆட்சியில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை நடத்த ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படுமோ? என இந்திய கவலை தெரிவித்துவரும் நிலையில், காஷ்மீர் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக போரை நடத்தும் திட்டம் இல்லை என தலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிபிசி உருதுக்கு நேர்காணல் அளித்த தலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், "ஒரு இஸ்லாமியராக காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. இஸ்லாமியர்கள் உங்களுடைய மக்கள் என குரல் கொடுப்போம். உங்களின் சட்டத்தின்படி அவர்களுக்கும் சமமான உரிமைகள் உண்டு" என்றார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தலிபான்கள் வெளியிட்ட கருத்துக்கும் இப்போதைய கருத்துக்கும் பெரிய முரண் உள்ளது. முன்னதாக, "காஷ்மீர் இருநாடுகள் சம்மந்தப்பட்ட உள்நாட்டு பிரச்சனை" என தலிபான்கள் தெரிவித்திருந்தனர்

 

Tags :

Share via