இயக்குனர் விக்னேஷ் சிவன் கருத்தில் ,நீங்கள் ரோட்டு ராஜாவா என்கிற விளம்பர பதாகை....

by Admin / 17-02-2024 01:45:44am
 இயக்குனர் விக்னேஷ் சிவன் கருத்தில் ,நீங்கள் ரோட்டு ராஜாவா என்கிற விளம்பர பதாகை....

சென்னை முழுவதும் ஒரு சில நாட்களில் எங்கு திரும்பினாலும் நீங்கள் ரோட்டு ராஜாவா என்கிற விளம்பர பதாகை நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. பெருநகர மாநகர காவல் துறை சார்பாக வைக்கப்பட்ட இந்த விளம்பர பலகை பலரினுடைய பார்வையை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. எதற்காக இந்த விளம்பரத்தை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும்எழுந்த பொழுது.... பொறுத்திருங்கள்.இன்னும் சில நாட்களில் ,இது பற்றிய தகவல் வெளிவரும் என்கிற மாதிரியான பதிலோடு விளம்ப ர பதாகை காட்சி தந்தது. ஒரு காலத்தில் புள்ளி ராஜா என்கிற பெயர் எந்த அளவிற்கு புகழ் பெற்ற ஒரு விளம்பரமாக மாறி இருந்ததோ அதே மாதிரி இந்த விளம்பரமும் அமைந்திருந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் கருத்தில் ரோட்டில் பைக் ஓட்டி செல்லக் கூடியவர்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது தான் இந்த விளம்பரம் .யாராவது ரோட்டில் விதிகளை மீறி பைக் ஒட்டி சென்றால் அவர்களை புகைப்படம் எடுத்து ஹேஸ்  டேக்காக  x சமூக வலைதளத்தில் பதிந்தால் போதும். அவர்களை காவல் துறையினர் கவனித்துக் கொள்வார்கள். இதன் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது ..நடிகர் சாந்தனு இது பற்றிய விழிப்புணர்வு காட்சியில் நடித்துள்ளார்

 

 இயக்குனர் விக்னேஷ் சிவன் கருத்தில் ,நீங்கள் ரோட்டு ராஜாவா என்கிற விளம்பர பதாகை....
 

Tags :

Share via