தமிழக-கேரள எல்லைப்பகுதியான புளியரையில் கனரக வாகனங்களால் - 8 மணிநேரமாக கடும் போக்கு வரத்து நெரிசல்.

தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப்பகுதியான புளியரையில் கனரக வாகனங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் - 8 மணிநேரமாக சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லை பகுதியான புளியறை சோதனை சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் அதிக பாரங்களை ஏற்றி செல்வதன் காரணமாக அவ்வப்போது வாகன பழுது ஏற்பட்டு சாலையில் நிற்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.
அந்த வகையில் புளியரை S-வளைவு பகுதியில் அளவுக்கு அதிகமான அளவு சிமிண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற இரண்டு கனரக வாகனங்கள் அதிகாலை 1.30 மணியளவில் பழுதாகி ஒன்றன்பின் ஒன்றாக நின்று உள்ளதால் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக புளியரைதாட்கோநகர் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் கடந்து ஆரியங்காவு வரை வாகனங்கள் 8 மணிநேரமாக அணிவகுத்து நின்றது.அதேபோன்று ஆரியங்காவு முதல் எஸ்.வளைவு வரையிலும் தமிழகம் வரும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுனர்.தற்போது போக்குவரத்து நெரிசல் 8 மணிநேரத்திற்குபின்னர் சரிசெய்யப்பட்டுள்ளது.கனிமம் ஏற்றிசெல்லும்வாக்னங்கள் சபரிமலை சீசன் காலம் என்பதால் கட்டுப்பாடுகளாய் விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : தமிழக-கேரள எல்லைப்பகுதியான புளியரையில் கனரக வாகனங்களால் - 8 மணிநேரமாக கடும் போக்கு வரத்து நெரிசல்.